காவனூர்

காவனூர் சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர் வட்டதில்  கண்டவராயன்பட்டி  ஊராட்சி உள்ள ஓர் சிறிய கிராமம் .காவனூர்க்கு மற்றோரு பெயர் மேலக்கவனூர் என்று கூறுவர் ஏனென்றால் அருகில் காவனூர் என்று இன்னோர்  ஊர் உள்ளது அது கீழ காவனூர் என்றும் இதை மேலக்காவனூர் என்றும்  அழைப்பர் .

காவனூரில் கிழக்கே வெள்ளாளச்சி அம்மனும் மேற்கே அருள்மிகு கற்பக விநாயகரும்,  பெரிய கண்மாய் கரையில் ஸ்ரீ காடப்பிள்ளை அய்யனார் கோவிலும் தெற்கே கம்மாய் கரையில் கருப்பர் கோவிலும் உள்ளது .

ஸ்ரீ கற்பகமூர்த்தி விநாயகர் கோவில்:


பிள்ளையார் கோவில் இந்த கோவிலில் வருடம் வருடம் லட்சார்ச்சனை மார்கழி மாதம் செய்யப்படும் .கடந்த இரண்டு(2017-2018) வருடங்களாக  செய்யப்படவில்லை.மார்கழி மாதம் முழுவதும் ஒவ்வொரு கரையாக திருப்பளிச்சி  செய்வார்கள். வருடத்தில் ஒருநாள் ஊர் மக்கள் எல்லோரும் வைகாசி மாதம் ஒரு வெள்ளிக்கிழமை அன்று மாலை நேரத்தில் பொங்கல் வைத்து வழிபடுவார்கள்.


காடப்பிள்ளை அய்யனார் கோவில்:






 கோவிலின் முன்னே கட்டப்பட்டுள்ள அரண்மனை குதிரைகள் இதில் உள்ள ஒரு குதிரையின் சிலையில் ஒரு வீரன் காளையை அடக்குவதுபோல் வடிமைத்துள்ளனர் . அது மிகவும் சிறப்பாக காட்சி அளிக்கிறது.


காடப்பிள்ளை அய்யனார் கோவில் ஊரின் மேற்கே பெரிய கண்மாய் கரையில் அமைந்துள்ளது .இந்தக்கோவிலில் 2007 ஆம் ஆண்டு புரவியெடுப்பு நடந்தது .அதன் பிறகு இப்போது கோவில் புதுப்பிக்கும் பணி  நடந்து கொண்டிருக்குறது . 

பள்ளிக்கூடம் :




திருப்பத்துர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ,காவனூர் .


இது பழைய பள்ளிக்கூடம்  .இது 2006 இல் கட்டிடடம்  சீரமைக்கப்பட்டது .

இது 2007 ஆம் ஆண்டு கட்டப்பட்டது .


 வீட்டுப்பொங்கல்  அனைவரும் அவரவர் கோவில் வீடு  அல்லது அவர்கள் குலதெய்வம் கோவில் சென்று பொங்கல் வைத்து சிறப்பாக கொண்டாடுவார்கள் . சில பேர் அவர்கள் வீட்டிலேயே பொங்கல் வைத்து  வீட்டுப்பொங்கலை சிறப்பாக கொண்டாடுவர் . 







அதற்கு அடுத்த நாள் மாட்டு பொங்கல் இது விவசாயிகள்  தங்கள் வயல்களில் பயிர்களை வளர்க்க மாடுகள் கடுமையாக உழைப்பதனால்  கால்நடைகளுக்கு நன்றி சொல்லும் வகையில் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது.


எங்கள் ஊரில் முதலில்  பொங்கல்  மந்தை முன்பு வைப்பார் அதன் பிறகுதான் ஊர்மக்கள் அனைவரும் அவரவர் தொழுவில் பொங்கல்  வைக்க ஆரம்பிப்பர் . மாட்டுப்பொங்கல் முதல் நாளே மாடுகளை குளிப்பாட்டிவிடுவர். பொங்கல் வைத்து முடித்தபின் மாடுகளை அலங்காரம் செய்து தொழுவில் கட்டுவர் .பிறகு பட்டி சுத்துவர்கள் அதாவது செய்த பொங்கலை மாடுகள் அனைத்திற்கும் ஊட்டி மகிழ்வர் .


இது எல்லாம் முடிந்தவுடன் மந்தை முன்பு சாமி அழைப்பு நடைபெறும் .நடந்த பிறகு முதலில் கோவில் காளை  அவிழ்த்து விடப்படும் சாமியாடிகள்  மற்றும் ஊர்பெரியவர்கள் ஒவ்வொரு கரையாக சென்று தொழுவை திறந்து வைப்பார்.இது வருடம் வருடம் நடைபெற்று வருகிறது .

(இது கோவில் காளை .இது இந்த ஊரின் 9 வது  கோவில் காளை .இந்த காளை 2010 ஆம் ஆண்டு வாங்கி விடப்பட்டது )

வெள்ளாளச்சி அம்மன் :

வெள்ளாளச்சி அம்மன் கோவில் 






  பூங்குன்ற நாயகி அம்மன் :
       

காவனூர் அருகில் உள்ள மகிபாலன்பட்டியில் அமைந்திருக்கும் ஸ்ரீ பூங்குன்ற நாயகி அம்மன் கோவிளுக்கு புரட்டாசி மாதம் ஒரு  செவ்வாய்க்கிழமை  அன்று ஊர் மக்கள் அனைவரும் சென்று கிடா வெட்டி பொங்கல் வைத்து அம்மனுக்கு சிறப்பு பூஜை சேந்து வருகின்றார்கள் .




No comments:

Post a Comment

என் கண்ண பாரு .......இதுதாண்டா எங்க ஊரு......... மொறச்சா உன்ன மொறப்போம்.....நீ அடுச்சா உன்ன அடிப்போம்........... திருப்பத்தூர் பெயர்க...