ஆளப்போறான் தமிழன்
இயக்கம் : அட்லீ
நடிப்பு : விஜய், சமந்தா, நித்யா மேனன், காஜல் அகர்வால்,வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
ஒளிப்பதிவு : விஷ்ணு
திரைக்கதை : அட்லீ, விஜயேந்திர பிரசாத்
மருத்துவம் வியாபாரமாவதற்கு எதிராகப் பொங்கியெழும் விஜய் அதற்கு எதிராக என்ன செய்தார், மக்களுக்கு என்ன சமூகக் கருத்துச் சொல்கிறார் என்பதே மெர்சல் படத்தின் கதை.இதை அழகாக மக்களிடம் எடுத்துசொல்லும் இயக்குனர் அட்லீயின் கதைப்போக்கு பாராட்டிற்குரியது.
மெர்சல் திரைப்படத்தின் மூலம் மக்கள் மனதில் மெர்சலை ஏற்பத்தியுள்ளார் அட்லீ.
மெர்சல் திரைப்படத்தின் மூலம் மக்கள் மனதில் மெர்சலை ஏற்பத்தியுள்ளார் அட்லீ.
படத்தின் ஆரம்பத்தில் சென்னையின் முக்கிய மருத்துவர்கள் சிலர் கடத்தப்படுகிறார்கள்.இன்னொரு பக்கம் பாரிஸில் ஐந்து ரூபாய் டாக்டர் மாறனுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடை பெறுகிறது.அங்கே ஒரு டாக்டரை மேஜிக் ஷோவுக்கு நடுவே கொலை செய்கிறார் விஜய்.டாக்டர்களைக் கொல்பவர் இந்த ஐந்து ரூபாய் டாக்டரா, மேஜிக் கலைஞரா, இல்லை இரண்டுமே ஒருவர் தானா என்பதைத் தேடுகிறார்கள் போலீசும், வில்லன் எஸ்.ஜே.சூர்யாவும்.
இத்திரைப்படத்தில் அப்பா ,மருத்துவர்,மேஜிசியன் என மூன்று வேடங்களில் நடிக்கும் விஜயின் நடிப்பைக்காணும் பொழுது நிஜமாகவே மெர்சலாக உள்ளது.இவர்களுக்கு ஜோடியாக நித்யா மேனன் ,சமந்தா ,காஜல் அகர்வால் நடித்துள்ளனர்.திரைப்படத்தின் தொடக்கத்திலேயே தமிழனின் தனித்துவத்தை மிகவும் சிறப்பாக காட்டியுள்ளார் .விஜய் வெளிநாடு சென்று விமான நிலையத்தில் இறங்கியவுடன் அவரின் உடையை கண்ட காவலர்கள் அவரது பாஸ்ப்போர்ட்டை கேட்டு அவருக்கு தேவையில்லாத அலைச்சலை ஏற்படுத்திய அந்த தருணத்தில் ஒரு பெண்ணின் உயிரை காப்பாற்றி தான் ஒரு மருத்துவர் என் பெயர் மாறன் என்பதை நிரூபித்தார் .அந்த நேரம் அங்கிருந்த தமிழ்நாட்டு பெண் ஒருவள் அடுத்தமுறை வரும்போது வேஷ்டி அணிந்து வராதீர்கள் என்றதற்கு விஜய் கூறிய பதில் அவர் ரசிகர்களிடத்தில் துள்ளலை ஏற்படுத்தியது.
நகைச்சுவை நாயகனாக பல திரைப்படங்களில் தனது திறமையை வெளிப்படுத்திய வைகை புயல் வடிவேலு இப்படத்திலும் மக்களை சில்லாக்கிடும்மா என்னும் வார்த்தையின் மூலம் சிரிக்கவைத்தாலும் படம் முழுவதும் கலகலப்பை ஏற்படுத்தவில்லை என்பது ஒரு குறை.விஜயின் வளர்ப்புத்தாய் தோற்றத்தில் கோவை சரளா அவரது பங்கை சிறப்பாக ஆற்றியிருக்கிறார்.
வெற்றி(மேஜிசியன்)காஜலிடம் உலகத்திலேயே மிகப்பெரிய மேஜிக் ஷோவில் எனது கனவு ஒன்றை நிறைவேற்ற போகிறேன் என்று கூறி அவர் பி.ஏ வாக பணிபுரியும் மருத்துவரையே கொலை செய்து விடுகிறார்.அந்த தருணத்தில் விஜயின் வசனம் ரசிகர்களை பரவசத்திற்குள்ளாகியுள்ளது.
நீ பற்று வைத்த நெருப்பொன்று பற்றி எரிய உன்னை கேற்கும் .
நீ விதைத்த விதையெல்லாம் உன்னை அறுக்க காத்திருக்கும்.
படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கும் எஸ்.ஜே.சூர்யா தனது நண்பன் கொலை காரணமாக படத்திற்குள் அறிமுகமாகிறார்.அவர் வில்லனாக இருந்த்த்தாலும் அவரது அறிமுக வசனம் நண்பர்களுக்கு மதிப்பளிக்கும் படி உள்ளது.பணம்,பேர் புகழ்,அதிகாரம் இதெல்லாம் இழந்துட்டா திரும்ப சம்பாரிச்சுரலாம். ஆனா உண்மையான நண்பனை இழந்துட்டா இட்ஸ் ய கிரேட் லாஸ் .
டாக்டர் மாறனை இன்டெர்வியூ செய்வதற்காக சமந்தா படத்திற்குள் அறிமுகமாகிறார்.அவரின் டேய் தம்பி ரோஸ் மில்க் வாங்கித்தரேண்டா என்னும் வசனமே பெரும் வரவேற்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.மாறனுக்கும் தாரா(சமந்தா) விற்கும் காதல் வர நீதானே நீதானே என்னும் பாடல் மூலம் இருவருக்கும் நிச்சயம் நடந்துவிடுகிறது.இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
கதையை தொடர்ந்து கொலை செய்த காரணத்தினால் வெற்றி(மேஜிசியன்) கைது செய்யப்பட்டு சத்யராஜ்(காவலர்) விசாரணையின் பொழுது ஒரு ஏழை குடும்பத்தின் நிலைமையை விஜய்
சொல்லும் விதம் மிகவும் வித்தியாசமாகவும்,சோகமாகவும் இருந்தது.அதாவது, ஒரு ஆட்டோக்காரன் தனது குழந்தையை பள்ளி கூடத்தில் மிகவும் சந்தோசகமாக இறக்கிவிட்டு அவளது தந்தை வீடு திரும்பும் பொழுது அதே இடத்தில் அவளுக்கு விபத்து ஏற்பட ,அவளுடைய தந்தை படபடத்து போக ,ஆம்புலன்ஸ்-ஐ அருகில் இருந்தவர்கள் அழைக்க ,அந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் காசுக்காக அந்த குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்காமல் தனியார் மருத்துமனையில் அனுமதித்து அவனுக்கான பணத்தை பெற்றுக்கொள்ளும் அவனுடைய செயல் மிகவும் கோவத்தை ஏற்படுத்துவததாகவும் ,அவனுக்கு மனிதாபிமானம் சிறிது கூட இல்லை என்றும் அறிய முடிகிறது.
இருந்தும் அவளது தந்தை தனது மகள் உயிர் பிழைக்க வேண்டும் என்றுஎண்ணி மருத்துவமனையில் அனுமதிக்க,அங்குள்ள டாக்டர்கள்அவளுக்கு ஆபரேஷன் செய்தாலும் உயிர் பிழைக்க மாட்டாள் என நன்றாக தெரிந்த பின்பும் அவர்களிடமிருந்து பணத்தை பறிக்க எண்ணி ஆறு லட்சம் ரூபாய் காட்டினாள் மட்டுமே ஆபரேஷன் செய்ய முடியும் என்றும் ,பிறகு தான் உயிர் பிழைப்பாள் என கூற,அவளது பெற்றோர்கள் இருந்தவற்றை அடகு வைத்து பணத்தை கட்டிய பிறகு,
அவள் இறந்துவிட்டால் என டாக்டர்கள் பெற்றோர்களிடம் கூறிய பிறகு அவர்கள் கதறி அழும் காட்சி மனதை உருக்கியது.அவர் குழந்தை இறந்தவுடன் அவளது உடலை கேட்ட பெற்றோரிடம் மீதமுள்ள பணத்தை காட்டினால்தான் உடலைத்தரமுடியும் என்று டாக்டர் சொல்ல அவளது அம்மா மனமுடைந்து மேலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வது மனதை உருக்கும் கட்சியாக உள்ளது.இப்போதைய உலகில் பணம்தான் அனைத்தையும் தீர்மானிக்கிறது என்பதை மிக அழகாக காட்டியுள்ளார் இயக்குனர் அட்லீ.அக்குழந்தையின் பழிக்கு காரணமாக இருந்த நால்வரையும் மிரட்டலாக கொன்ற காட்சி இன்றைய உலகில் அவர்களைப்போல் இருப்பவர்களின் மனதில் மிரட்டலை ஏற்படுத்தியுள்ளது.
மாறன் இன்டெர்வியூ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக அதை கண்ட எஸ்.ஜே.சூர்யா பழைய ஞாபகங்கள் மின்னலாக வந்து செல்ல அவனைக் கொள்ள திட்டமிட்ட பொது வெற்றி(மேஜிசியன்) மாறனை காப்பாற்றி ஓரிடத்தில் அடைத்து வைத்தபின்னர் தானிருக்கும் இடத்தை காவலருக்கு தெரியப்படுத்தி தானே தான் உங்களிடம் மாட்டிக்கொண்டேன் என்று கூறி மாறன் அங்கிருக்க நீ யார் என்ற கேள்வியை அனைவர் மனதிலும் பதியவிட்டு செல்கிறார்.
வடிவேலுவை பின்தொடர்ந்த மாறன் ,வெற்றி(மேஜிசியன்) இருக்கும் இடத்தை அடைந்து வெற்றியை தாக்கும்போது வடிவேலு உணர்ச்சிவசப்பட்டு பிளாஸ்பாக்கை சொல்ல ஆரம்பிக்கிறார்.
பஞ்சாப்பில் மல்யுத்த போட்டியாளராக அறிமுகமாகும் விஜயின் ஜோடியாக நித்யாமேனன் நடித்துள்ளார்.அவர்களுக்கு பிறக்ககும் குழந்தையே மாறனாக வளர்கிறார்.ஆளப்போறான் தமிழன் என்னும் ஒரே பாடலின் மூலம் தமிழின் பெருமையும் தமிழனின் தனித்துவத்தையும் உணர்ச்சி மல்க கூறியுள்ளார்.
ஊருக்கு திரும்பிய தளபதி தன் மனைவியின் இரண்டாவது பிரசவமும் ஊர்த்திருவிழாவும் இரட்டிப்பு சந்தோசத்தை அளித்தாலும் மறு பக்கம் பெரிய தீ விபத்தின் மூலம் ஊரில் இரு குழந்தைகளின் உயிர் ஊசலாடிக்கொண்டு இருக்கும் தருவாயில் 25 கிலோமீட்டர்க்கு அப்பால் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றாலும் அவர்கள் உயிர் பிரிந்தது.இதன் காரணமாக ஊர்மக்கள் அனைவரும் முடிவு செய்து தங்கள் நகைகள் நிலங்களை விற்று பணம் ஏற்பாடு செய்து இலவசமான மருத்துவம் கிடைக்கும்படி ஒரு மருத்துவமனையை கட்டினார்கள்.மருத்துவராக எஸ்.ஜே.சூர்யாவும் படத்தின் தொடக்கத்தில் கொல்லப்பட்டடவரும் மருத்துவர்களாக அறிமுகமாகிறார்கள்.தளபதியை ஏமாற்றி மருத்துவமனையை தனது(எஸ்.ஜே.சூர்யா)பெயருக்கு மாற்றி கொள்கிறார்.
நன்றாக சென்று கொண்டிருந்த நேரத்தில் திடீரென நித்யா மேனனுக்கு வலி ஏற்பட தளபதி மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.பணத்திற்காக சுகப்பிரசவத்தை பொய்யான காரணங்களால் ஆபரேஷன் செய்யவேண்டும் என சொல்லி இறுதியில் அந்த குழந்தை இறந்தே பிறந்தது.நித்யாமேனன் தளபதியிடம், உண்மையை கூறி அவரும் இறந்துவிடும் நேரத்தில் வில்லனாக வரும் எஸ்.ஜே.சூர்யா தளபதியையும் மாறனையும் கொல்ல எண்ணிய போது வடிவேலு மாறனை காப்பாற்றினார். தளபதி சாகும் நேரத்தில் கூறிய வசனம் வாழ்க்கைக்கு ஏற்றதாக இருந்தது.இறந்ததாக நினைத்து குப்பையில் வீசப்பட்ட குழந்தை உயிருடன் எழுந்தது.அதுவே வெற்றி(மேஜிசியன் ). இதே நேரத்தில் சத்யராஜும் இதே கதையை வெற்றியின் வளர்ப்பு தந்தை மூலமாக அறிந்து கொள்கிறார்.
நீ உண்மையா மறைக்க பாக்குற ,அது யாராலயும் முடியாது. ஒண்ணுக்கு ரெண்டா உன் கண்ணு முன்னாடி வந்து நிக்கும் என்னும் வசனம் பார்வையாளர்களை உற்சாகப்படுத்தியது.
நம்பினோர் கைவிடப்படுவதில்லை என்பது பழமொழியாக இருந்தாலும் நம்பினோர் நிச்சயம் ஏமாற்றப்படுவார் என்பதே இக்காலத்தின் புதுமொழியாக உள்ளது.
இறுதியில் வெற்றி தனது தம்பி என்பதை அறிந்த மறுகணமே வெற்றி கைது செய்யட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்.அதே நேரம் மாறனை மிரட்ட கிளினிக் சென்ற குட்டிவில்லன் மற்றும் வெற்றியை காண ஜெயிலுக்கு சென்ற எஸ்.ஜே.சூர்யா இருவரும் குழம்பும் படி நம்மளையும் குழப்பி பிறகு தெளிவு படுத்தியது சுவாரஸ்யமாக உள்ளது.கிளினிக்கில் இருந்த வெற்றி தன்னை மிரட்ட வந்தவனின் கையை அறுத்தார்.அவன் தப்பி ஒரு ஆட்டோவில் ஏற அது இறந்த அந்த ஏழைக்குழந்தையின் அப்பாவாக இருப்பது மிகையே.பின்னர் வெற்றி ,மாறன் இருவரும் இணைந்து சண்டையிட்டு வெற்றி கையால் எஸ்.ஜே.சூர்யா கொல்லப்படுகிறார்.
இறுதியாக தளபதி விஜய் பேசிய வசனங்கள் அனைவரையும் யோசனையில் ஆழ்த்தியது.ஜிஎஸ்டி,அரசு மருத்துவமனைகளில் மின்சாரம் இல்லாமை, ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை என அனைத்து பிரச்சனைகள் பற்றியும் எடுத்து கூறியுள்ளார் இயக்குனர் அட்லீ.இப்படத்தில் அவர்கள் சொல்லவருவது ஒரே விஷயம் தான்.மருத்துவம் என்பது வியாபாரம் அல்ல.அது ஒரு சேவை.
ஒரு நாட்டின் பணக்கார மனிதனுக்கு கிடைக்கும் மருத்துவ வசதி,அந்த நாட்டின் ஏழை மனிதனுக்கும் லகிடைக்க வேண்டும் .அதுவே ஒரு சிறந்த நாடு."தரமான மருத்துவம்,அனைவர்க்கும் இலவசம்" என்னும் வசனம் படத்தின் முக்கிய அங்கமாக உள்ளது.
முதல் படத்திலேயே மிகவும் கவனிப்புக்குள்ளான இயக்குநர் என்பதால் அடுத்தடுத்து இரண்டு படங்களை விஜய்யை வைத்து இயக்கிவிட்டார் அட்லீ. முதல் படமான 'ராஜா ராணி'க்கும், மௌனராகத்திற்குமே இன்னும் தமிழ் சினிமா உலகம் ஆறு வித்தியாசங்களைத் தேடிக் கொண்டிருக்கிறது. இப்போது வெளியாகியிருக்கும் மெர்சல் படத்தை கிட்டத்தட்ட 'அபூர்வ சகோதரர்கள்' படத்தோடு ஒப்பிடலாம். என்றாலும், ஒரு படத்தில் மட்டும் கை வைக்காமல் தமிழில் வெளிவந்த பல படங்களின் ஸ்க்ரிப்ட் பேப்பரில் ஒவ்வொரு தாளையும் உருவியிருக்கிறார் அட்லீ. ஆனாலும், அவற்றை ரசிகர்கள் விரும்பும் பேக்கேஜாக மாற்றியதுதான் அட்லீயின் வித்தை. பரபரப்பான அரசியல் சூழலில் ரசிகர்களுக்கு அவல்பொரி கொடுக்கும் வகையில் விஜய்யை அரசியல் பேசவைத்து படத்திற்கு வசூலை வாரித்தருகிறார் அட்லீ. யெஸ். விஜய் ரசிகர்களுக்கு 'மெர்சல்' படம் முரட்டு விருந்து.
Supper
ReplyDeleteVera level
ReplyDeleteSemma
ReplyDeleteSemma
ReplyDelete