Thursday, 26 September 2019

 



நடிகர்கள்: விஜய், சமந்தா, எமி ஜாக்ஸன், மகேந்திரன், ராஜேந்திரன், பேபி நைனிகா, ராதிகா, பிரபு

ஒளிப்பதிவு: ஜார்ஜ் சி வில்லியம்ஸ்

இசை: ஜிவி  பிரகாஷ்குமார்

யாரிப்பு: கலைப்புலி எஸ் தாணு

இயக்கம்: அட்லி

இளைய தளபதி விஜய் ,சமந்தா ,எமி  ஜாக்ஸன் ,சுனைனா ,பிரபு ,ராதிகா ,மொட்டை ராஜேந்திரன்  என பல நட்சத்திரங்களும் ,இயக்குனர் உதிரிப்பூக்கள் மகேந்திரனும் இணைந்து நடிக்க எஸ்.தாணு தயாரிப்பில்  அட்லீ இயக்கத்தில் ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையில் வெளிவந்திருக்கும் விஜயின் 61-வது படம் தெறி .
இப்படத்தில் விஜய் ஜோசப் குருவில்லா ,தர்மேஸ்வர் மற்றும் விஜயக்குமார் ஐ.பி.எஸ் அதிகாரி என மூன்று வேடங்களில் நடித்து தனது ரசிகர்கள் மனதை தெறிக்கவிட்டுள்ளார்.சமந்தா ,எமி  ஜாக்ஸன்   இருவரும்  இப்படத்தின் நாயகிகளாக நடித்துள்ளனர் .
படத்தின் தொடக்கத்தில் கேரளாவில் தன் மகள் நிவேதிதா ( நைனிகா)வுடன்  பேக்கரி நடத்தி கொண்டு அமைதியாக வாழ்ந்து வரும் விஜய் ,நைனிகாவின் பள்ளி ஆசிரியரான எமி  ஜாக்ஸன் ஒரு விபத்தின் போது இடித்தவர்கள் மீது காவல்துறையில் புகார் செய்ய ,எந்த பிரச்சனையும் வேண்டாம் என்று புகாரை வாபஸ்  வாங்க விஜய் செல்ல ,அங்கே விஜயை பார்க்கும் ஒரு 'பேட்ச் மேட் ' மூலம் 'ஜோசப் குருவில்லா என்று தன்னை சொல்லிக்கொள்ளும் இவர் யார்?' என்ற கேள்வி எமி  ஜாக்ஸன் எழ அதற்கான விடையை கமர்ஷியலும் சென்டிமென்ட்டும் கலந்து தந்திருக்கும் படமே 'தெறி'.
கேரளாவில்  பேக்கரி நடத்தும் விஜய்(ஜோசப்) தன் மகள் நிவேதிதாவுடன்( நைனிகா )நடத்தும் குறும்புகள் அனைத்தும் "என்ன மீனா டீக்கா" என்னும் பாடலின் மூலம் அழகாக கூறியுள்ளார் இயக்குனர் அட்லீ.




விஜய் தன் மகள் நைனிகாவிடம் "அந்த டீச்சர் பேர் என்ன பேபி? யாரு பேபி,சரியா கவனிக்கல பேபி , முட்ட கண்ணு ரோஸ் கலர் பண்ணு கன்னம்" என்னும் போது "சரியா  கவனிக்கலன்னு சொன்ன பேபி" எனும் நைனிகாவின் குழந்தைத்தனமான பேச்சு பார்ப்பவர்கள் மனதை படம்முழுவதும் ரசிக்கச் செய்யும் படியாக உள்ளது.



குட்டாவை அடித்ததற்காக எமி ஜாக்ஸன் விஜயையும் நிவி(நைனிகா)யையும் சர்ச்சுக்கு வர சொல்கிறார்.அங்கு டீச்சரை இடித்ததற்காக நிவி அவனை திட்ட அவன் நிவியை அடிக்கவரும் பொழுது டீச்சர் அவனை அடிக்க மறு நாள் நிவியும் எமியும் பைக்கில் செல்லும்போது இடித்ததற்காக காவல்நிலையத்தில் புகார் கொடுக்க அதை விஜய் மறுத்து புகாரை வாபஸ் வாங்க செல்லும் இடத்தில் மலையாளம் தெரியாது என்று கூறிய விஜய் சரளமாக மலையாளம் பேசுவதைக் கண்ட எமிக்கு சந்தேகம் எழ அன்று இரவே இணையதளத்தில் தேட விஜயின் உண்மை நிலவரம் எமிக்கு தெரியவர, அவர் விஜய் வீட்டிற்கு செல்ல அங்கே விஜய் விபத்து ஏற்படுத்தியவர்களிடம் சண்டையிடுவதைக் கண்டவுடன் பழைய நினைவுகளை எமியுடன் பகிர்ந்து கொள்கிறார்.
பள்ளியில் ரௌடிகளின் அட்டகாசத்தை சண்டை இல்லாமல் மூன்றாம் வகுப்பு படங்களின் மூலம் துரத்தி "ஜித்து ஜில்லாடி" என்னும் படல் மூலம் படத்தின் பிளஷ்பாக் தொடங்குகிறது.

விஜய் தன் அம்மா ராதிகாவுடன் பெண் பார்க்க செல்லும் போது சுனைனா பெண்ணாக வருகிறார்.அவர் வருவது ஒரு காட்சி என்றாலும் தனது நடிப்பை அழகாக கொடுத்துள்ளார்.சுனைனாவிற்கும் விருப்பமில்லாததால் விஜய் சந்தோசத்துடன் தன் அம்மாவுடன் திரும்பும் பொழுது சிக்னலில் சிறுவர்,சிறுமிகள் பிச்சை எடுக்கும்பொழுது விஜய் பள்ளியில் படிக்கிறியா  என்று கேட்டதற்கு வேண்டாம் என்று கூறிக்கொண்டிருக்கும்  சமயத்தில் சிறுவர்களை பிச்சை எடுக்க வைத்து சம்பாரிக்கும் கேவலமான ரவுடி விஜயிடம் பேச ,எப்போவும்போல விஜய் அவர்களுக்கு தனது பாஷயில் பதிலடி கொடுத்ததும் இல்லாமல் அவர்களை மருத்துவமனையிலும் சேர்க்கிறார்.அந்த குழந்தைகள் விஜயிடம் என்னை படிக்கவிக்கிறீங்களா அண்ணா என்று கேட்பது பார்வையாளர்களை கலக்கமுறச்செய்கிறது.
அழகு தேவதையே டாக்டர் உருவமாக அறிமுகமாகிறார் சமந்தா.முதல் பேச்சிலேயே விஜயிடம் தன் மனதை பறிகொடுத்த சமந்தா,விஜயை பஸ்ஸில் சந்திக்கும் பொழுது அழகாக தனது காதலை வெளிப்படுத்துவது மிகையே.

தான் அம்மாவிடம் அரசு வாகனம் என்று கூறி சென்ற விஜய்,தனது காதலியை அதே வாகனத்தில் வளைகாப்பிற்கு அழைத்துச் செல்ல,அதே விழாவிற்கு ராதிகாவும் வர,பிறகு 3-பேரும் வீட்டிற்கு வர ராதிகா விஜயிடம் சமந்தாவை பிடிக்காததுபோல் பொய்கூறி பிறகு சமந்தா மூலம் உண்மை தெரிய ராதிகாவின் பேச்சு விஜயை கண்கலங்க வைத்தது.
ஒரு நாள் இரவு விஜய் ஸ்டேஷனில் இருந்தபோது ஒரு வயதானவர் தனது மகளை காணவில்லை  என்று புகார் கொடுக்க அந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்து பாதிக்க பட்டு   சாகும் நிலையில் கண்டெடுக்கப்பட்டு கடைசி உயிர் பிரியும் தருவாயில் விஜய்குமார் (விஜய் )அந்த பெண்ணிடம் என்னை ஒரு அண்ணனாக நினைத்து நடந்தது பற்றி கூற சொல்லி கேட்கும் போது அந்த பெண் அவளுக்கு  நடந்த  கொடூரத்தை மிகவும் அழுகையுடன் எடுத்து சொல்லும் பொது அந்த காட்சியானது விஜய்குமார் (விஜய் )யை மட்டுமில்லாமல் பார்க்கும் அனைவரையும் உருக்கியது.
அந்த பெண் கதையை சொல்லி முடிக்க அவளது உயிர் அவளை விட்டு பிரிகிறது.பின்  அவளை அடக்கம் செய்கின்ற நேரத்தில்  அவளுடைய அப்பா விஜய்குமார் (விஜய் )யை பார்த்து மிகவும் மனம் உடைந்து  அந்த நிலைக்கு ஆளாக்கியவர்களை கண்டுபிடித்து ஒரு அண்ணனாகவோ ,அல்லது ஒரு போலீஸ் ஆகவோ தண்டிக்கும் படி கேட்டு கொள்கிறார் .அந்த காட்சி மிகவும் கொடுமையாகவும்,மனதையும் உருக்கியது. 
இந்த உருக்கமான காட்சிக்கு பின் விஜய்குமார் உறுதியாக வில்லனின் மகன் தன் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து  கொன்றது என உறுதிபடுத்தி வில்லனின் வீட்டிற்கு சென்று,அங்கு இருந்த பிரபு வை பார்த்து மகேந்திரனின்(வில்லன்) மகனை  கைது செய்ய வந்திருக்கிறேன் என கூற அவளுடைய அம்மா எனது மகன் அப்டிலாம் செய்திருக்க மாட்டான் என கதறும் நிலையில் ,வில்லன் தனது மனைவியை செய்கையின் மூலம் அமைதியாக இருக்க சொல்கிறார்.ஆனால் வில்லன் தனது மகனை காப்பாற்ற ஏற்கனவே  காணவில்லை என கூற விஜய்குமார் அதிர்ச்சி ஆகிறார்.அதன் பின் சில மிரட்டலான மற்றும் மெதுவான உரையாடலுக்கு பின் தனது தலைமை அதிகாரி ஒப்புதலுக்கு இணங்க வீட்டை விட்டு வெளியேறுகிறார் விஜய்குமார்.  


காரில் விஜய் குமாரும் ,மொட்டை ராஜேந்திரனும் பேசி கொண்டு வந்திருக்கும் பொழுது இடையில் காரை நிறுத்த சொல்கிறார் விஜய்.ஒரு பாலத்தில் காரை நிறுத்திய பின் தமிழ்நாட்டில் நடக்கின்ற கற்பழிப்பு செய்திகளை பற்றி கூற,பிறகு விஜய் அதிர்ச்சியும் ஆர்வமும் ஊட்டும் வகையில் மொட்டை ராஜேந்திரனை பாலத்தின் அடியில் போய் பார்க்க சொல்கிறார்.அந்த தருணம் தளபதி விஜய் என்ன செய்திருப்பார் என்ற ஆர்வத்தை அதிகரித்தது .அதேபோல் ,விஜய் மகேந்திரனின்(வில்லன்) மகனை பாலத்தின் அடியில் தலைகீழாக தொங்க விட்டிருக்கும் காட்சி சந்தோசமாகவும் ,பெருமையாகவும் இருந்தது.எல்லாவற்றையும் செய்து விட்டு எதுவும் தெரியாதது போல் இருக்கும் விஜய்யின் அழகை கூற வார்த்தைகள் இல்லை.என்பதை உணர வைக்கிறார் அட்லீ .
தனது மகன் இறந்த செய்தியானது வில்லனை வந்து சேர மிகவும் பதட்டத்துடன் அந்த இடத்திற்கு வருகிறார் மகேந்திரன்.அங்கு பரிசோதனைக்காக வந்த ஒருவர் விஜயிடம்  எப்படில்லாம் கொல்ல பட்டிருக்கிறான் என்பதை கூற வில்லனுக்கும் மட்டும் இல்லாமல் பார்க்கும் அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.அவனை கொன்றது விஜய் தன் என அறிய முடிகிறது.அதை விஜயகுமார் தனது வாயாலே சொல்லும் அழகுக்கும்,ஸ்டைலுக்கும்,அளவே இல்லை.இந்த சம்பவமானது படத்தில் வில்லனுக்கு மட்டும் பதிலடியாக இல்லாமல் இதய போல் தவறு செய்யும் பலருக்கு பெரு அடியாகவும்,மிரட்டலாகவும் இருந்தது.


இந்த கதையை ஜோசப் ஆக நடிக்கும் விஜய் குமார் எமிஜாக்சனிடம் கூற இடைவேளையை தொடர்ந்து விஜயின் ஆட்டம் ஆரம்பம் ஆகிறது.அடுத்த நாள்  பேக்கரி கடைக்கு எமிஜாக்சன் வருகிறார்.மொட்டை ராஜேந்திரனிடம் ஜோசப் என விசாரிக்காமல் விஜயகுமார் என விசாரிக்க  மொட்டை ராஜேந்திரன் விஜயை பற்றி தெரிந்து விட்டதோ என அதிர்ச்சி ஆகிறார்.அது மட்டும் இல்லாமல் உண்மையை மறைப்பதற்காக மழுப்புகிறார்.எமிஜாக்சன்.விடாமல் விஜயை பற்றி கேட்டு கொண்டே இருக்க மொட்டை ராஜேந்திரன் விஜயின் காதல் மனைவி மித்ரா (சமந்தா)பற்றிய உண்மையான,உருக்கமான காதல் நிறைந்த கதையை சொல்ல ஆரம்பிக்கிறார்.
முதலில்,சமந்தா மற்றும் அவருடைய குடும்பமும் ஒரு ஹோட்டலில் தனது மகள் சமந்தாவின் காதலனை (விஜய் குமார்)பார்க்க காத்திருக்கும் தருணத்தில் விஜய் அங்கு வருகிறார்.சமந்தாவின் மூலம் அவளுடைய குடும்பத்திற்கு போலீஸ் வேலை பிடிக்காது என்பது தெரிய வர,விஜய் சமந்தாவின் அப்பாவிடம் எனக்கு அப்பா இல்லை.அம்மா மட்டும் தான்.நான் உங்களை அப்பாவாக நெனைக்கிறேன் என்று சொல்லியும்,சமந்தாவின் தங்கையை பார்த்து ,இது போல் எனக்கு ஒரு குட்டி தங்கச்சி இல்லை என்று நான் பல நாள் எங்கிருக்கிறேன் என்று கூறும்  போது ஒரு உண்மையான நிகழ்ச்சி போல் அந்த காட்சியானது மனம் நெகிழ வைத்தது.எப்படியோ ஒரு வழியாக சமந்தாவின் குடும்பத்தினர் சமாதானம் ஆகும் நேரத்தில் வில்லனின்(மகேந்திரன்)அடியாட்கள் நுழைந்து விஜயை துப்பாக்கியால் சுட,குண்டானது  கண்ணாடி மீது பட்டு தெறிக்க பதிலுக்கு பதிலாக விஜய்க்கும்,அடியாட்களுக்கும் சண்டை மெர்சலாக இருந்தது.
இந்த சண்டையை பார்த்து விஜய் வேண்டாம் என முடிவு செய்கிறார்கள் சமந்தாவின் குடும்பத்தினர். தன்னை கொல்ல மகேந்திரன் (வில்லன்)தான் ஆள் அனுப்பிருப்பான் என்பதை அறிந்த விஜய் வில்லன் வீட்டிற்கு சென்று தமாஷாக மிரட்டுகிறார்.விஜய் எத்தனை முறை அலைபேசியில் அழைத்தாலும் நிராகரிக்கிறார் சமந்தா .அந்த நேரத்தில் சாலை  ஓரத்தில் நடந்து வந்து கொண்டிருக்கும் சமந்தாவை  விஜய் அலைபேசியில்  அழைக்க ,அதை அவள் நிராகரிக்க,இதை நேருக்க நேராக பார்க்கின்றனர் விஜயும்,சமந்தாவும்.உடனே விஜய் அவளிடம் என்ன பிரச்சனை என கேட்க ,அவள் அந்த சண்டையில் விஜயை கத்தியால் குத்த வரும் பொழுது அவள் உயிர் அவளிடம் இல்லை என்பதை  அவள் அழுகையின் மூலம் அழகாக வெளிப்படுத்துகிறார்.
 பின் போலீஸ் வேலை வேண்டாம் என்றும்,நான் சொல்வதை கேட்கவில்லை என்றால் இப்பொழுதே ஒரு ஆட்டோ வில் என்னை ஏற்றி விட்டு விடு என்று மனமே இல்லாமல் கூறுகிறாள்.உடனே விஜயும் ஒரு ஆட்டோ வில் போகும் படி கோவத்தினால் வழிகாட்டுகிறார்.சிறிது தூரத்திலே ஆட்டோவை நிறுத்தி விட்டு ஓடி வந்து சமந்தா விஜயை கட்டி பிடித்து காதலை வெளிப்படுத்தும் காட்சி அழகாகவும்,உண்மையான காதலையும் உணர்த்தியது.
பிறகு சமந்தா விஜயை இழந்து விடுவோமோ என்ற பயத்தில் விஜயை அணைத்து கொண்டு நீ என்ன விட்டு போ மாட்டில என கேட்க ,அதற்கு விஜய் நீ எனக்கு எவ்வளவு முக்கியமோ அதே  மாறி தான் என் போலீஸ் வேலையும்.உனக்காக அதையும் ,அதுக்காக உன்னையும் நான்  என்றும் இழக்க மாட்டேன் என்றும் ,சத்தியமா உன்ன விட்டு போ மாட்டேன் என்றும் விஜய்  சொல்ல,சமந்தா காதலின் உச்சமும் ,வாழ்வின் மிச்சமும் இனி உன்னுடனே என உணர்ந்து  சமந்தா விஜயை பார்த்து வா இப்போவே கல்யாணம் பண்ணிக்கலாம் என செல்லமாக கேட்க ,அதற்கு விஜய் டைம் ஆச்சே பரவாலாயா?என்று கேள்வி கேட்க ,சமந்தா பரவாயில்லை என்று சொல்லி விட்டு அழுகையுடனும்,காதலுடனும்,விஜயை கட்டி அணைக்க ,இருவருக்கும் ஒரு காதல் பாடல் வருகிறது.

பிறகு வீட்டில் இருவரும் ஆசையாக பேசி கொண்டு இருக்கும்போது விஜயிடம் சமந்தா நா  உனக்கு எப்படிப்பட்ட மனைவி என என கேட்க, அதற்கு விஜய் பத்தி அளிக்கும் முன்னரே சமந்தா வில்லனால் சுட்டுகொல்லப்படுகிறாள்.அது மட்டும் இல்லாமல் விஜயின் அம்மாவையும்,கொலை செய்கிறார்கள் .இதில் விஜயும்,குழந்தையும் மட்டும் தப்பிக்கிறார்கள்.சமந்தா சாகும் தருவாயிலும் நா  உனக்கு எப்படிப்பட்ட மனைவி என அழுது கொண்டே கேட்க விஜய் நீ எனக்கு இன்னொரு அம்மா மா ...என்ற கூறிய காட்சி மனதை உருக்கியது..சமந்தா தனது குழந்தையை விஜய் கையில் கொடுத்து விட்டு இறந்து விடுகிறார்.எல்லாமே இழந்து விட்ட காரணத்தால் தான் விஜய் இன்று ஜோசப் ஆக நடிக்கிறார் என்று எமிஜாக்சனிடம் கூறி பழைய கதையை முடிக்கிறார் மொட்டை ராஜேந்திரன்.

ஜோசப் ஆக நடிக்கும் விஜய்குமார் மீது வில்லனுக்கு சந்தேகம் எழ பிறகு உறுதியாக அது விஜய்குமார் தான் என கணித்துவிடுகிறார்.அதன்பின் குழந்தையை பள்ளிக்கூடத்திலிருந்து  வீட்டிற்கு அழைத்து செல்வதற்காக வந்த விஜய் நிவியின் (நைனிகா)வற்புறுத்தலுக்கு இணங்க எமிஜாக்சனை தனது வண்டியில் உடன்  அழைத்து வர,அப்பொழுது விஜய்யின் காதல் மனைவி சமந்தா சொன்ன எங்க போனும் னு தெரியல..ஆனா வாழ்க்க முழுவதும் இப்டியே போனும் னு தோணுது என கூற..சமந்தா விஜயின் நினைவிற்கு வருகிறார்.நிவியை  சுற்றுலாவிக்காக அனுப்பி வைக்கும் பொது அந்த பேருந்தில் பாம் வைத்து விஜயின் மகளை வில்லன்  கொல்ல பார்த்ததனை  வில்லனே விஜயிடம் கூற விஜய் பாலத்தில் கவிழ்ந்த  எல்லாரையும்  காப்பற்றுகிறார்.
வில்லன் மீண்டும் அலைபேசியில் சவால் விட..ஜோசப் ஆக நடிக்கும் விஜய் உயிரோடு இருப்பது மகேந்திரனை தவிர வேற யாருக்கும் தெரியாமல் இருக்க,இதை நன்றாக வில்லன்களை கொள்வதற்காக பயன்படுத்தி கொள்கிறார் விஜய்.வெளியில் ஜோசப் ஆகவே நடிக்கும் விஜய் உலக மக்களுக்கு இறந்து போனதாக இருந்ததால் அனைத்து தவறுகளையும் தண்டிக்கிறார் விஜய் ஒரு ஆவி போன்று..இந்த காட்சி ஆனது வித்யாசமாக இருந்தது.


இறுதியில் வில்லன் விஜய் மற்றும் நைனிகாவை கடத்துகிறார்.விஜயை அடித்தும்,பிறகு  அந்த நேரத்தில்  விஜய்  நிவியிடம் எனக்கும்,உனக்கும் அம்மா இல்லாததற்கு காரணம் இவர் தன் என வில்லனை பார்த்து விஜய் சொல்ல,உடனே அந்த குழந்தை வில்லனிடம் சென்று மன்னிப்பு கேட்க சொல்லும் காட்சி மிகவும் அருமையாக இருந்தது.விஜயகுமார் உயிரோடு இருப்பது தலைமை அதிகாரியான பிரபுவிற்கு மட்டுமே தெரியும் அவரும் உடன் இருந்து வில்லன்களை பலி வாங்கும் படி கதையை கொண்டு வந்தது அட்லீயின் அற்புத படைப்பு.

                                  
முடிவில் மகேந்திரனும் விஜயினால் கொல்லபடுகிறார் .அனால் இந்த செய்தியானது பிரபுவின் மூலம் விஜய் தன் கொன்றார் என்பது கற்பனை .விஜய் இறந்துவிட்டார் என்று செய்தியாளர்களிடம் கூறி நம்ப வைக்கிறார்.இவரது அறையில் வந்து பார்க்கும் போது விஜய் உட்காந்து  இருப்பது மிகவும் மாஸ் ஆக இருந்தது.மீண்டும் விஜய் சாதாரண மனிதனாக வெளியூருக்கு தனது மகள் மற்றும் எமிஜாக்சன் மற்றும் மொட்டை ராஜேந்திரன் இவர்களுடன் சென்று சந்தோசமாக வாழ்கிறார்.
கடைசி ஒரு காட்சியில் விஜயின் உண்மையான மகள் நடித்திருக்கிறார் 
                                         























































































































































































































































































No comments:

Post a Comment

என் கண்ண பாரு .......இதுதாண்டா எங்க ஊரு......... மொறச்சா உன்ன மொறப்போம்.....நீ அடுச்சா உன்ன அடிப்போம்........... திருப்பத்தூர் பெயர்க...